எங்களைப் பற்றி

மாலை மாற்றும் திருமணக் காட்சி

கொங்கு சுடர் ஆடிட்டர் பாலசுப்ரமணியம் அவர்களின் வழிகாட்டலில், கொங்கு சிப்பி ரா.முத்துரத்தினம் அவர்களின் கள ஒருங்கிணைப்பில், கொங்கு மாவட்டங்களில் உள்ள திருமண மண்டபங்களில் கொங்கு திருமணப் பதிவுத் திருவிழா நடத்தப்பட்டு, பதிவு செய்யப்பட்ட வரன்கள் விவரங்கள் தொகுக்கப்பட்டு, கொங்கு சுடர் சிறப்பு மலர் தபால் மற்றும் கூரியர் என எதற்கும் எவ்வித கட்டணமும் இல்லாமல் கொங்கு சமுதாய மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

கொங்கு திருமணப் பதிவுத் திருவிழா - 1 முதல், கொங்கு திருமணப் பதிவுத் திருவிழா - 16 வரை சிறப்பு மலர் மற்றும் மாத இதழில் வெளியிடப்பட்டு வந்தது. தொடர்ந்து இனி கொங்கு திருமணப் பதிவு திருவிழா - 17 முதல் அச்சு இதழிலிருந்து இணையத்தில் தொடர்கிறது.

தங்களுக்கு இது தொடர்பாக விவரங்கள் தேவை இருப்பின் நிகழ்வு நிர்வாக குழு உறுப்பினர்களையோ அல்லது அருகில் உள்ள உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களையோ தொடர்பு கொண்டு மணமகன் மற்றும் மணமகள் விபரங்களை விசாரித்து அறிந்து கொள்ளவும்.

கொங்கு சமுதாய மக்களின் வரன் தேடலின் சிரமங்களுக்கு தீர்வாக இந்த வலை தளத்தை உருவாக்கியுள்ளோம். பதிவு செய்து பலன் பெற்ற கொங்கு சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்.

இந்தச் சேவைக்கு நாங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எவ்வித கட்டணமும் பெறுவதில்லை. இது தொடர்பாக தங்களிடம் யாராவது தொடர்பு கொண்டால் எங்களிடம் புகார் தெரிவிக்கவும்.

தங்களது மேலான கருத்துகளையும், ஆலோசனைகளையும் எங்களுடன் பகிருங்கள். நன்றி.

கொங்கு திருமணப் பதிவுத் திருவிழா - 90925 42404, 90470 35050.